பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
வானொலியில்
அன்புடைமை

மண்ணுக்கு மணமில்லை; மண்ணுக்கு வளமூட்டக் கொட்டப்பெறும் உரத்திலும் மனமில்லை. மாறாகத் துர்நாற்றம் வீசுகிறது. இந்தக் சூழ்நிலையில் அதில் ஒரு மல்லிகைச் செடி நடப்பெறுகிறது. அச்செடிக்கும் மனமில்லை. செடியின் விளைவாக அதனுள்ளிருந்து முகிழ்த்து வெளிவருகிறது மொட்டு. பின், அது மலராகிறது; மணம் வீசுகிறது; மானிடர் முதல் மாதேவன் வரை விரும்பி அணியும் தகுதி பெறுகிறது. மலரின் மணம், மணமற்ற செடியில் முகிழ்த்து வெளி வருகிறது. என்னே அதிசயம்! இந்த எளிய-ஆனால் அரிய காட்சி சிறந்த படிப்பினைக் கற்றுத் தருகின்றது. உடலில் உயிர்ப்பு இல்லை. ஆனால் உடம்புக்கு உயிர் இயக்கம் தருகின்றது. உடலுக்கு வாழ்வு உயிர்நிலை; உயிரின் உயிர்நிலை அன்பே யாகும்.

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்றார் திருவள்ளுவர். தனக்கெனப் பொன்னிலும், பொருளிலும், போகத்திலும் உயிர் ஈடுபடும்பொழுது அவ்வுயிர் நோயுறுகிறது; நொந்து அழிகிறது. பிறர்க்கென முயலும்பொழுது உயிர் உயர்நிலை