பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



265


செய்யப்படும் செயல் வெந்தும் வேகாமல் இறக்கிய அரிசிச் சோற்றைப் போல அல்லலைத் தரும்.

செயல் செய்வதென்பது ஒரு கலை. அந்தச் செயல் முறையாக முழுமையாகச் செய்யப்பெறின் களை கட்டி விளங்கும்; நிறைந்த பலனைத் தரும். செயலைச் செய்யும் முன்பு அச்செயலோடு ஒன்றாகி உணர்வுடன் கலந்து விட வேண்டும். உணர்வோடு கலந்து செய்யப்பெறாத செயல் சோர்வுபடும். செயலில் ஈடுபட மனத்திற்கு அழுத்தமான உணர்வு இருக்க வேண்டும். முடிந்தால் செய்யலாம். சந்தர்ப்பம் இருந்தால் செய்யலாம் என்பன போன்ற விவாதங்கள் கவைக்கு உதவாதன. செயலைத் தொடங்கினால், அச்செயலைத் தொடர்ந்து நிறைவேறும் வரை கவனத்துடன் செய்யவேண்டும். ஒரு செயலைத் தொடர்ந்து செய்யின், மனித சக்தியும் கூட மிஞ்சும். செயலை விட்டு விட்டுச் செய்யின், அச்செயல் தொடர்பான செய்திகளை நினைவு கூர்தலில் மனித ஆற்றல் கழியும். இடையீடு பட்டதில் பாதிக்கப் பெற்றுவிடும். எல்லாவற்றிற்கும் மேலாகச் செயல் செய்தற்குரிய ஊக்கம், ஊக்கத்துடன் கூடிய உணர்வு முழுமையாக விளங்காது. ஆதலால் நமது நாட்டில் கட்டிமுடிக்கப் பெறாத வீடுகள் ஏராளம். நிறைவேற்றி முடிக்காத திட்டங்கள் அளப்பில. எழுதி முடிக்கப் பெறாத கற்பனைகள் கணக்கில. வன மகோத்சவத்தில் கன்றுகள் வைத்தும், கணக்கிலேற்றியும் வளர்ந்து பயன் தராது பட்டுப் போன கன்றுகள் ஆயிரம் ஆயிரம். இவையெல்லாம் செயலில் தொடர்ச்சியின்மையின் விளைவுகள். வானொலிக்கு உரிய கட்டணம் காலத்தில் கட்டாது, காலம் கடந்து செலுத்தித் தண்டம் கொடுப்போர் எத்தனை பேர். தாம் வாங்கும் செய்தித் தாளுக்கு உரிய காலத்தில் சந்தா செலுத்தாது பத்திரிகை நின்று, நின்று படிப்போர் எத்தனை பேர்? ஏன்? முடியாமை அல்ல. கூடாது என்பதும் அல்ல. இதற்குப் பெயர்தான் அக்கறையின்மை. செய்யும் பணியில் அக்கறை