பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



269


வெற்றி தோல்விகளோடு இணைத்துச் சிந்திப்பதே சிறுமை. இந்தச் சிறுமைக்கு ஆளாகிவிட்டால் போலித்தனமான, பயன் தராத, வறட்சி தன்மையுடைய கெளரவ உணர்வுகளுக்கு அடிமையாக நேரிடும். இந்த வகை உணர்வுக்கு மனிதன் ஆளாகிவிட்டால் அவன் சைத்தான்ாகிவிடுவான். இது கொடுமை.

உண்மையான பெருமை முயற்சியை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப் பெறுகிறது. நல்ல காரியத்திற்கு நல்ல வண்ணம் முயற்சியைத் தொடங்கிக் களத்தில் போராடித் தோற்றாலும் பெருமையே! ஓர் உயர்ந்த பணிக்காக மனிதன் நடந்த வழிநடைப் பயணங்கள் பெருமைக்குரிய அளவு கோல்கள். ஆதலால் பணியைத் தொடங்கும் முன்பே இப்பணி பெரியது. நம்மால் ஆகக்கூடியதில்லை என்று எண்ணற்க! கைவருந்தி உழைக்கும் மனிதன் தெய்வம்! உழைப்பின் முத்திரைகளைக் கைகள் பெறட்டும்! கால்கள் பெறட்டும்! சந்தித்த தோல்விகளின் காயங்கள் முழங்காலிலும் கிடக்கட்டும்! பொய்ம்மையான வீண் பழக்கத்திற்கு அடிமையான சமூகத்தின் வசைகளும் குவியட்டும்! அஞ்சற்க! அயர்ச்சியை விலக்குக! நம்மால் ஆகும் என்று நம்புக! நம்மால்தான் செய்ய முடியும் என்று உறுதி கொள்க! முயற்சியினைத் தொடங்குக! பெருமை வந்து சேரும்.

‘அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.’

611
உள்ளத்தை வளர்த்திடுக!

வாழ்க்கை, பார்வைக்கு எளிதாகக் காட்சியளிக்கிறது. அப்படித்தான் பலர் கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான வாழ்க்கை அருமையானது. ஆனாலும் எளிமையானது. சிக்கல்கள் நிறைந்தது. ஆனாலும்