பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உரிமையுடையவர்கள். அவர்களுக்கு ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்க உரிமையுண்டு. அவர்களில் எவரும் ஆள்பவராகவும் வர முடியும். குடியுரிமை என்பதை ஒரு தகுதி-உரிமை-கடமை என்றெல்லாம் கூறலாம்.

திருவள்ளுவர் சிறந்த ஓர் அரசியலறிஞர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், அரசியலும் ஆட்சியியலும் வளர்ச்சியடையாதிருந்த காலத்தில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சிறந்த அரசியலை மானுட உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. திருக்குறள் தோன்றிய காலத்தில் மன்னராட்சி முறையே நிலவியது. ஆனால், திருக்குறள் முதல் முதலாக மக்களைத் தழுவிய குடியாட்சி முறையை அறிமுகப் படுத்துகிறது.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.’

(544)

இந்தத் திருக்குறளுக்குச் செவ்விதாகப் பொருள் கொள்ளாவிடில் பிழைகள் நேரிட வாய்ப்பிருக்கிறது. அஃதாவது குடிகளைத் தழுவிய அரசு என்றால் குடிகளினுடைய ஆசைகளைத் தழுவிய அரசு என்று பொருள் கொண்டு- குடிகளுக்குத் தீங்கு செய்து விடக்கூடாது. பிரெஞ்சு மொழீயில் "Gentleman Corruption to the poor" என்று ஒரு பழமொழி உண்டு. அஃதாவது இலவசம், தானம், தருமம் என்பதெல்லாம் பணக்காரர்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும் இலஞ்சம் ஆகும். இங்ஙனம் வழங்கப் பெறும் இலஞ்சம் காலப் போக்கில் மனிதனைத் தற்சார்பு இல்லாதவனாக்கி வெறும் பிழைப்பு அஃதாவது நாய்ப் பிழைப்புக்காரனாக ஆக்கிவிடும். எனவே, குடிகளின் நலனைத் தழுவிய அரசு அமைதல் வேண்டும். திருவள்ளுவர் காலத்திலும் மக்கள் நலனுக்கு மாறான அரசுகள் இருந்தன. கொடுங்கோன்மையும் நடந்தது. இதனை விலக்கிச்