பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



257


செங்கோல் செலுத்தும் அரசைக் காண்பதே திருக்குறளின் குறிக்கோள்.

இன்று நமது நாட்டில் நடப்பது குடியாட்சி. ஆட்சியாளர்கள் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப் பெறுகிறார்கள். வாக்காளர்களின் அரசியல் அறிவுத் தகுதிக்கேற்ப ஆட்சி அமையும். ஆதலால், வாக்காளர்களுக்கு அரசியல் அறிவும் தெளிவும் தேவை. இவ்வகையில் நமது நாட்டின் வாக்காளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டும் நூல் திருக்குறள் ஆகும்.

மனிதன் நாட்டுக்குச் சொத்து. இதுதான் உண்மை. ஆனால் இன்றுள்ள நிலை வேறு. இன்று நாம் நமது நாட்டை நம் சொத்தாக நினைக்கின்றோம். அதனால் நம்மால் நாட்டுக்கு எட்டுனையும் பயன் இல்லை. நாட்டைச் சுரண்டுகின்றோம். நாடு வறுமையிலும், உள்நாட்டு - வெளி நாட்டுக் கடன்களிலும் மூழ்கித் தவிக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ரூ. 2,24,180 கோடி கடன் இருப்பதாக அறிகிறோம். நமது நாடு சுரண்டப்படுதலையும் நாட்டின் பொருளாதாரச் சீரழிவுகளையும் கடன் சுமைகளையும் நமது வாக்காளர்கள் அறிதல் வேண்டும்; உணர்தல் வேண்டும். நாம் அனைவரும் இந்த நாட்டினுடைய சொத்து. ஆதலால், நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீட்க வேண்டும். மேலும் இந்த நாட்டை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வேண்டும். இந்தப் பணியைச் செய்து முடிக்கக்கூடிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்றெல்லாம்-நாள்தோறும் எண்ண வேண்டும். வாக்களிப்பதற்கு முன் ஒருமுறைக்கு மூன்று முறை எண்ண வேண்டும். நம்முடைய இலட்சியமாக உள்ள நாட்டினை அமைக்கக்கூடிய திறனாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். திருக்குறள் காட்டும் நாடாக நமது நாடு அமையவேண்டும்.

நம்முடைய நாடு எப்படி அமையவேண்டும்? நமது நாட்டில் வெறும் சோற்றுக்குப் பஞ்சம். மக்கள் பசியால்