பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



279


சமாதானமும் அமைதியும் தழுவிய நாடாக அமைதல் வேண்டும் என்ற உணர்வை இழத்தலாகாது.

நமது நாடு பசி, பிணி, செறுபகை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று விளங்கும் நாடாக அமைதல் வேண்டும். இது பொதுவான தன்மை. அதாவது நாடு தழுவிய கொள்கை.

நமது நாட்டின் மனித ஆற்றல் அளப்பரியது. ஆனால் மனித ஆற்றலை முறையாக வளர்த்துப் பயன்பெறவில்லை. அறிவுத் திறனும் செயல்திறனும் உடைய மக்களை நாம் நமது கல்விச் சாலைகளில் உருவாக்க வேண்டும். இதற்குக் கல்வி நிலையங்கள், நூலகம், அறிவியல், ஆய்வகம் (Science Laboratory), தொழில் பயிலுதற்குரிய தொழிலகம் முதலியன அமைத்திடுதல் வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளில் தரமான கல்வி தர வேண்டும். ஆரம்பப் பாட சாலைகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் 1:35 என்றே அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் மொழிச் சிக்கல் தீர்ந்தபாடில்லை. அரசியல் கட்சிகள் மொழிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் காலங்கடத்துகின்றன. மொழிப் பிரச்சனையை உணர்ச்சி நிலையில் அணுகுதல் பிழை என்பதை உணரவேண்டும். தமிழ் நாட்டில் அனைத்து மட்டத்திலும் துறைதோறும் தமிழே பயிற்று மொழியாக அமைதல் வேண்டும். தமிழே எல்லாத் துறைகளிலும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். ஆட்சியிலும் கல்வியிலும் மட்டுமல்லாமல் - வாணிபம், தொழில், கோயில் வழிபாடு, இசை போன்ற அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும்.

ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் வகுப்பில் கற்பிக்கப்பெறுதல் வேண்டும். மற்றும் மாணவர்கள் விரும்பிக் கற்கக்கூடிய நிலையில் விருப்பப்பாடமாக ஒன்பதாவது வகுப்பிலிருந்து இந்தி மொழி, உருசிய மொழி, சமஸ்கிருத