பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு அரசு, மனித உரிமைகளை மீறிக் கொடுமைப்படுத்தினால் ஐ.நா. சபை தலையிடலாம். தடா சட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவையல்ல. தக்க விசாரணையின்றிச் சிறையில் வைத்தலாகாது.

மனிதனின் உரிமைகள், அவன் பிறப்புடன் இயற்கையாகவே அமைந்தவை. நமது அரசியல் சட்டப் பிரிவுகள் பல செயற்பாடே இல்லாது உள்ளன. செயற்பாடில்லாதவற்றைச் செயலிழந்தவை என்று கூறுவதில் தவறு இல்லை. இந்த நிலையில் 100 தடவைக்கு மேல் சட்டம் திருத்தப் பெற்றுள்ளது.

இதில் செய்யப் பெற்ற திருத்தங்களில் மக்கள் நலம் கருதிய திருத்தங்கள் ஒன்றிரண்டுதான். இந்த வகையில் 17ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மிக முக்கியமானது. 17ஆவது அரசியல் சட்டத் திருத்தம் நில உடைமை பற்றியது. இந்தத் திருத்தத்தைக் கொண்டு வரும்பொழுது காங்கிரஸ் ஆட்சி செய்தது.

பிரதமர் ஜவாஹர்லால்நேரு காலத்தில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மையிருந்தும் இந்த அரசியல் சட்டத் திருத்தம் தோற்றது. அதாவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிலே பலர், நிலச் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காட்டவில்லை. நவ இந்தியாவின் சிற்பி பண்டித ஜவாஹர்லால் நேருவின் உயிரினை விலையாகக் கொண்டு பிறந்தது 17ஆவது சட்டத் திருத்தம்.

இத்திருத்தம் இந்திய சமுதாயத்தில் நில உடைமை அடிப்படையில் மாற்றங்களைச் செய்யக்கூடியது. ஆயினும், இந்த அரசியல் சட்டத்திருத்தம் கூட இன்னமும் நடை முறையில் வெற்றி பெறவில்லை. இன்றைய சூழ்நிலையில் வெற்றி பெறாது என்று கருத இடமிருக்கிறது.

இந்தியா புகழ்மை பொருந்திய பழைய நாடு. இந்தியா ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியாவை ஆண்ட அரசர்கள்