பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அண்மைக் காலமாக மேடைகளில் பேசி வருகிறார்கள். இது போதாது. இந்த வகையில் திருவருட் பேரவை மேலும் விரிவாகவும் விரைவாகவும் பணி செய்ய வேண்டும். எந்த ஒரு சிந்தனையும் நினைப்பும் இந்தியன் என்ற சிந்தனை அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும். அவ்வாறே பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முயல வேண்டும்.

இந்தியர் எவரும் யாருடனும் எந்தக் காரணத்திற்காகவும் அந்நியராகக் கூடாது. ஒருமையுடையவராகவே வாழ்தல் வேண்டும்.

அடுத்து மொழி; மொழியின் தோற்றம் மனிதர்களுக்குள் உறவு உண்டாக்கவே. காலம், இடம் காரணமாகப் பல மொழிகள் உருவாயின. ஆயினும் எல்லா மொழிகளுக்கும் நோக்கம் கருத்துப் பரிமாற்றமும் உணர்வுப் பரிமாற்றமுமேயாம்.

அடுத்து, அறிவு வளர்ச்சி; அறிவு, கருத்து எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை. ஆதலால், மொழி வேற்றுமை பாராட்டுவதும், மொழி வேற்றுமை அடிப்படையில் இன வேற்றுமைகளைப் படைத்துக் கொண்டு முரண்படுவதும் மோதுவதும் கூடாது. அறவே கூடாது.

ஒவ்வொருவரும் பல மொழிகளையும் விரும்பிக் கற்க வேண்டும். குறைந்தது ஐந்து மொழிகளாவது கற்றால்தான் மனிதன் முழு மனிதனாவான் என்று ரஸ்கின் கூறுகின்றான்.

ஆனால் இந்திய மொழிகளில் செறிவான கலாச்சாரம் மிக்க சமஸ்கிருதம், இந்திய மக்கள் பெரும்பான்மையினரையும் இணைக்கும் இந்தி மொழி, உலக மொழி ஆங்கிலம் இவற்றைக் கற்க கூச்சப்படக்கூடாது.

தமிழ், நமது தாய்மொழி. எளிதில் கற்கலாம். பிற மொழிகளைக் கற்பது அறிவு வளர்ச்சிக்கும் மற்றவர்களுடன் கலந்து உறவாடிப் பழகுவதற்காகவுமேயாகும். ஆதலால் பிற மொழிப் பயிற்சியால் தாய் மொழியாகிய தமிழ் வளர