பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
சமநிலைச் சமுதாய அமைப்புக்குத் திருக்குறள் முரணாகாது!

திருக்குறள் ஒரு அறநூல்; நீதி நூல்; வாழ்க்கை நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித குலத்தின் வாழ்வியல் நிலைகளைக் கணித்து நோக்கின் திருக்குறளின் சிறப்புத் தோன்றும். திருக்குறள் மனித குலத்தை வாழ்வாங்கு வாழத் தூண்டுகிறது; வழி நடத்துகிறது. ஆனால் மனித குலத்தின் நடைப்பயணம் இன்னமும் வள்ளுவர் வழியில் நடைபெறவில்லை. அது தன் போக்கிலேயே பயணம் செய்து கொண்டிருக்கிறது. வள்ளுவம் வாழ்க்கையை வாழ்க்கையாகவே அணுகுகிறது; வாழ்க்கையைப் பயனுடைய தாக்கவே விரும்பி நெறிமுறைகளை வகுக்கிறது.

வள்ளுவம் வாழ்க்கையை அணுகும் முறை அறிவியல் முறை; நம்பிக்கைக்குரிய நெறிமுறை. வள்ளும் மனித குலச் சிக்கல்களுக்குக் காரணமாய் அமைந்துள்ள பல்வேறு உண்மைகளை ஆராய்ந்து அந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுள்ளது. மனித குலத்தின் அல்லது மனிதர்களின் வாழ்க்கை அவர்கள் சம்பந்தம் உடையதா? அல்லது