பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குமுகாயத்தில் சாதி வேற்றுமைகள் நிலவும், அதனால்தான் குமுகாயப் புதுமையை, பொதுமையை நாடியவர்கள் எல்லாரும் சமயத்தை எதிர்ப்பவர்களானார்கள். இத்துறையில் திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புதிய முறையில் கருத்தை வெளிப்படுத்தியது. உயிர்கள் நிலைபெற்றவை. உயிர்களின் இன்ப துன்பங்கள் அவரவர் வினைவழி வருபவை; "வினை"-செயல், உயிர், உயிர்ப்புள்ளன. ஓயாது தொழிற்படுவது. செயல்கள் செய்வோர் அச்செயல்களுக்குரிய பயனை அடைய வேண்டும் என்பதே இக்கொள்கையின் கருத்து. உழைப்பின் பயன் உரியவர்களுக்கு என்ற கொள்கை அறிவுக் கிசைந்ததுதானே!

ஆயினும் ஓர் ஐயம்! திருக்குறள் மறுபிறப்புக் கொள்கைக்கு உடன்படுகிறது. "எழுபிறப்பு” என்று வள்ளுவம் கூறுகிறது. சமய நூல் மரபில் எழு பிறப்பென்பது.

'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்'

என்று பேசப் பெறுகிறது. தொல்காப்பியம் உயிர்களின் பிறப்பினை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக வகுத்துக் கூறுகிறது. ஆறு பிறப்பு வரை மண்ணியல் சார்ந்த வாழ்க்கை. ஏழாவது பிறப்பு கிடையாமல் சார்புடைய இன்ப அன்பியல் வாழ்க்கை என்பது கொள்கை. எல்லையற்ற பிறப்புகள் என்ற கருத்தும் உண்டு. ‘எழு’ என்பதற்கு இனி எழுகின்ற பிறப்புகள் என்றும், பொருள் கொள்வர். மறு பிறப்பில் நம்பிக்கை யில்லாதவர்கள் “எழு பிறப்பு” என்பதனை வாழ்க்கையின் ஏழு நிலைகளை எழு பிறப்பு என்று கொள்கின்றனர். இதனைச் செகப்பிரியாரும் “The Seven Stages of life” என்று