பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமநிலைச் சமுதாய அமைப்புக்குத் திருக்குறள் முரணாகாது!



321


கூறியுள்ளார். இவற்றில் எந்தக் கருத்தைக் கொண்டாலும் பிழை பெரிதொன்றும் இல்லை.

நேற்றைய தீய குணங்களினின்றும் விடுதலை பெற்றுப் புதிய குணமும் பொறியும், பெற்றால் “புதுப்பிறவி” என்றும், செத்துப் பிறந்துள்ளான் என்றும் கூறுவது வழக்கிலும் உண்டு. பல பிறப்புகள், மறுபிறப்புகள் என்ற கொள்கையின் மையம். உயிர்கள் படிமுறையில் வளர்ச்சியடைவது என்பதேயாகும். இங்கு வளர்ச்சி என்பது, உயிர்த் தொடர்பான அறிவும் குணங்களுமேயாம். கல்வி - ஒழுக்கத்தின் பயன்தான் எழுமையும் தொடரும். நிலம், பொன், பொருள் முதலியன உடற்சார்புடையன. இவை உயிரைத் தொடர இயலா. ஆதலால் சமநிலைச் சமுதாய அமைப்புக் கொள்கைக்குத் திருக்குறள் முரணாக இல்லை என்பது கருத்து.

தி.iv.21