பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



3. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல்.

4

இறைவன் வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன்; அவன் திருவடியை நினைப்பவர்க்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

பொருள்

துன்பத்திற்குக் காரணம் விருப்பும் வெறுப்புமே. விருப்பு வெறுப்பற்ற கடவுளை நினைப்பதால் விருப்பு வெறுப்புகள் நீங்கி விடுகின்றன. துன்பத்திற்குரிய காரணம் நீங்கி விடுவதால் துன்பமில்லை.

4. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

20

தண்ணீரின்றி உலகியல் இல்லை. வான் மழையின்றித் தண்ணீரில்லை. தண்ணீரில்லாத வழி ஒழுக்கமும் இல்லை.

பொருள்

உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தண்ணீர் இன்றியமையாதது: தண்ணீரைத் தரும் வான்மழை பொய்ப்பின் வளம் குன்றும்; அதனால் ஒழுக்கம் கெடும்.


5. குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

29

தீய இயல்புகளைக் கடந்து வளர்ந்து நற்குணங்களைப் பெற்று உயர்ந்து நிற்போர், வெகுளியை ஒரு நொடியும் தம் நெஞ்சத்தில் நிலைபெறச் செய்யமாட்டார்.