பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



97. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

979

பெருமைக்குரிய பண்பானது செருக்கின்றி வாழ்தல். சிறுமையென்பது தருக்கித் தற்பெருமை பாராட்டல்.

பொருள்

செருக்கினால் பெருமை வராது.

98. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

984

தவம் என்பது எந்த உயிரையும் கொல்லாத நலமுடையது. சான்றாண்மை யென்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத நலமுடையது.

பொருள்

தவத்தினும் சிறந்தது கொல்லாமை, சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாதது சிறப்பு.

99. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

994

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகு பாராட்டும்.

பொருள்

மற்றவர் பயன்பெற வாழ்தல் பாராட்டத்தக்க பண்பு.

100. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

1023

தான் பிறந்த குடியினை உயரச் செய்யும் பணிகளில் ஈடுபட்டு முயன்று பணி செய்வார்க்குத் தெய்வம்