பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவை வாயிலாகப் பழியைத் தவிர்க்கலாம்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’

50

இம்மண்ணில் வாழும் முறைப்படி வாழ்பவர்கள் இம்மண்ணிலேயே தெய்வம் போல் மதிக்கப்படுவார்கள்.

1. வாழ்வாங்கு வாழ்தல் - முற்கூறிய நெறிமுறைகளின் படி (இல்வாழ்க்கை, குறள் 1 முதல் 9 முடியவுள்ள விளக்கம் காண்க.)

2. தெய்வமாம் தகுதிக்கு விண்ணகம் வேண்டாம். மண்ணகமே போதும் - வாழ்வாங்கு வாழ்ந்தால்.

தெய்வம்: கண்டோர் வணங்க - மகிழ - வாழ்வளிப்பது.

அது போலவே சிறந்து வாழ்பவர் வாழ்க்கையும் அமைதலின் தெய்வம் என்றார்.

6. வாழ்க்கைத் துணை நலம்

முன்னுரை

திருக்குறள், தலை மகனின் வாழ்க்கைக்குத் துணையாக அமையும் பெண்களை "வாழ்க்கைத் துணை” என்று குறிப்பிடுகிறது. துணையாக அமைவது எல்லா வகையாலும் தம் அளவுக்கு வளர்ந்ததாக, தம்மிலும்கூட வலிமை சார்ந்ததாக அமைந்தால்தான் துணையாக அமைய முடியும். இதனால் பெண்ணிற்குக் கல்வி முதலிய உரிமைகளும், சமநிலைப் பாங்கும் வேண்டும் என்று கூறியதாயிற்று. ஆதலால் திருக்குறளில் வரும் தலைவனின் துணையாய் அமையும் பெண் வாழ்க்கைத் துணையாகின்றாள்! ‘இல்லை’ அந்தத் துணையால் அடையக் கூடிய ‘நல’மாகத் திகழ்கின்றாள்.