பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



1. செல்வம் இருந்தாலும் முறையான செயற்பாடு இன்மையால் செல்வம் அழிந்துவிடும்.

2. தலைமகன் புகழ்படு செயல்கள் பல உடையனாயினும் இவளின் வழிபடு செயல்களால் அவன் புகழும் கெடும்.

3. தலைமகள், வாழ்க்கைத்துணையாய் அமைந்தும், அவள் முறையாகத் துணையாயமைந்து செயற்படாததால் உணவுக்கும் உணர்வுக்கும் வேற்றிடங்களை நாடி ஒழுக்கம் குன்ற நேரிடும். ஆதலால் வாழ்க்கைத் துணை நலம் தேடி அமைக்கும் முயற்சி சிறப்பாக அமைதல் வேண்டும்.

‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.’

53

இல்லத்துத் தலைவி மாண்புடையவளாக விளங்கினால் அந்த இல்லத்தில் இல்லாதது எது? இல்லத்துக் குரியவள் மாண்புடையவளாக இல்லாது போயின் உள்ளது எது?

"இல்லை" என்பது இல்லாமையால் மட்டும் பிறப்பதன்று; இல்லாமை இல்லாமல் செய்து ஒழுகுதல் என்ற ஒழுக்கமின்மையால் பிறக்கிறது. தேவைகளை முன் கூட்டியே அறிந்து உரிய முயற்சிகளை மேற்கொண்டு, தேவை வரும்போது பயன்படுத்துதல் என்பது நல்லாட்சி முறை. சிறந்த இல்லத்தாட்சி இப்படி இருக்குமாயின் அந்த வீட்டில் இல்லாதது எது?

சிறந்த இல்லத்தாட்சி இல்லையாயின் உள்ளதையும் கூட அன்றைக்குப் பயன்பாடு இல்லையென்று கருதி, கவனிக்காது அழியவிட்டுப் பின் அந்தத் தேவை வரும்பொழுது இல்லையென்று கூறுதல். அல்லது தேவை வந்த பிறகு தேடுதல் சிறந்த இல்லாட்சி முறையன்று.