பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. உயிர்களுக்கு எலும்பு முதலியவற்றால் ஆய உடம்புடன் தொடர்பு ஏற்பட்டுப் பிறந்ததே, தலைவனும் தலைவியும் தம்முள் அன்பு செய்த வழக்கத்தின் பயன் அல்லவா?

3. உடற்பிறவி எடுத்த உயிர்கள் அன்புடை யராயிருத்தலே வழக்கம். ஆதலால் அன்பு காட்டுதலைக் கடமையாகக் கொள்க; பழக்கமாக்குக; வழக்கமாக்குக.

‘அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பெனும் நாடாச் சிறப்பு.’

74

அன்பு விருப்பங்களைத் தோற்றுவிக்கும்; நட்பைத் தரும்.

1. அன்பு உயிர்ப்புள்ள உணர்வு; வளர்ச்சித் தன்மை உடையது. மற்றவர்களோடு அன்பு கொண்டு பழகுக; அதுபோது அவர் தம் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைக்கும் ஆர்வம் தோன்றும் முயற்சிகள் கால் கொள்ளும். முயற்சிகள் பயன்களைத் தந்து வாழ்விக்கும். அவ்வழி நட்புத் தோன்றும்; அத்தகு நட்பே நாடி அடையாத - அடையத்தக்க சிறப்புகளைத் தரும்.

2. உற்றவர்களிடத்தில் அன்புடையராதலும் விருப்பங்களுடையராதலும் உறவுக்கு மூல உணர்வுகளாகும்.

3. அன்பு காட்டுக; விருப்பங்களைப் பேணுக. உறவுகளை வளர்த்திடுக; நட்புறவைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்க.

‘அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.’

75

வையகத்து வாழ்க்கையில் இன்புறுதலும், சிறப்புகள் பெறுதலும் அன்பினராகி வாழ்ந்த வழக்கத்தின் பயன். அன்புடையராதல் - வழக்காதல்: ஒரோ வழியன்றி இடையீடின்றி எப்பொழுதும் தொடர்ச்சியாக அன்புடையராதலை வழக்கம் என்று சிறப்பித்தார். அன்புடையராக