பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆதலால், இனிய சொற்களையே சொல்லியும் பேசியும் பழகுக!

‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.’

100

இன்பம் பயக்கும் இனிய சொற்கள் தன்னிடத்தில் இயல்பிலேயே அமைந்திருக்கும் பொழுது, அவற்றைக் கூறாது கடுஞ் சொற்களை முயன்று கூறுதல், கையகத்தில் இருக்கும் கனியைச் சுவைக்காது கையகத்தில் இல்லாததும் பிறரிடத்தில் இருப்பதுமாகிய காயைக் கவர்வதை ஒத்தது.

1. இயல்பாயமைந்த நிலை இனிய சொற்களை வழங்குதலேயாம்.

2. தம்மிடத்தில் இயல்பில் இல்லா அழுக்காறு, வெகுளி முதலியவற்றை முயன்று அடைந்து அவற்றால் சூடேற்றப்பட்டுக் கடுஞ் சொற்களைக் கூறுதல் கூறுவோருக்கும் இரத்தக் கொதிப்பு முதலிய நோய்களைத் தரும்; கடுஞ் சொற்களால் பாதிக்கப்பட்டோர் தரும் துன்பங்களும் வந்தமையும். ஆதலால், கடுஞ் சொற்களைக் கூறாது தவிர்த்திடுக.

3. கடுஞ் சொல்: சொல்லின் பொருள் நல்லது; ஆனால் சொல்லும் சொல் கேட்க இயலாததாக இருக்கும்.

கொடுஞ்சொல் சொல்லாலும் பொருளாலும் இன்னல் விளைவிப்பது. பொய், புறங்கூறல் முதலியன.

11. செய்ந்நன்றி அறிதல்

‘செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.’

101

நீ, முன்பு யாதொரு உதவியும் செய்யாத நிலையில் உனக்கு ஒருவர் உதவி செய்தால், அந்த உதவியை