பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



75


விண்ணுலகு மண்ணுலகு ஆகியவற்றைவிடப் பெரிதாகக் கருதிப் போற்றுக.

பொதுவாக உலகியலில் உதவிக்கு உதவி செய்தல் கூட அரிது. முன்பு நீ யாதொரு உதவியும் செய்யாதபொழுது வலிய உனது தேவை நோக்கி உதவி செய்யும்பொழுது அவர் உண்மையில் நல்லவராக இருத்தல் வேண்டும். இந்தச் சூழ்நிலையில் அவர் செய்யும் உதவி மிக மிக உயர்ந்தது என்று கருதிப் போற்றவேண்டும்.

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.’

102

உனக்கு உதவி தேவைப்பட்ட நெருக்கடி காலத்தில் ஒருவர் செய்த உதவியை ஞாலத்திலும் பெரிதாக எண்ணிப் போற்றுக.

‘பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.’

103

நாம் இன்ன உதவி செய்தால் நமக்கு இப்படி உதவி செய்வர் என்று எண்ணாமல் செய்த உதவியின் பயனை அளவிட்டுப் பார்த்து அந்த நன்மை கடலினும் பெரிது என்று கருதுக.

‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.’

104

தமக்கு ஒருவன் தினை அளவு நன்மை செய்தாலும் பயனைப் பனையளவாகக் கருதிக் கொள்வர் உதவியின் பயனைத் தெரிந்தவர்.

செய்த ஓர் உதவி அளவிற் சிறியதாயினும் அதன் பயன் நோக்கிப் பெரிதாக எண்ணி மகிழ்க! முகமன் கூறுக.

‘உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.’

105