பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



(ஈ) முறைமன்று முதலியவைகளில் சார்ந்து நின்று முறைகேடாகச் செய்தல்,

ஆகிய வாயில்கள் வழி வரும் பொருள்களைத் தவிர்த்திடுக.

3. மேற்கூறிய வழிகளில் பொருளீட்டிச் சேர்த்தல் அறிவையும் ஆள்வினையையும் கெடுத்துவிடும். அறிவும், ஆள்வினையும் என்றும் பயன்படும் ஆற்றல்கள்; விலை மதிப்புள்ளவை. பொருளை நம்பி இவற்றை இழப்பது நிரந்தரமான இழப்பாகப் போய்விடும்.

4. அதோடு, நடுவிகந்த வழியில் பொருள் ஈட்டுவதால் அப்பொருளை இழப்பவர்கள் பகை கொண்டு, பொருளைத் தட்டிப் பறிக்கவும் துன்புறுத்தவும் செய்வர்.

5. வணிக ஏமாற்று வெளிப்படும் போது அரசு தண்டனைகள் வழங்கும்.

6. மேற்கூறிய வழிகளில் ஈட்டப்படும் பொருள் இம்மையிலும் மறுமையிலும் இன்பமே தராது, துன்பத்தையே தரும். ஆதலால், அப்பொழுதே கைவிடுக.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.’

114

நடுவு நிலைமை யுடையவர்-நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்களுடைய மறைவிற்குப் பின் நிற்கும் புகழினால் காணப்படும்.

அவரவர்களுடைய பிள்ளைகளாலும் அறியப்படும் என்று கூறுவர்; இக்கருத்துத் தவறன்று. ஆயினும் நடை முறையில் நூற்றுக்குநூறு பொருந்துவதில்லை. ஒரோ வழி மாறுபாடுகள் நிகழ்கின்றன. அதுமட்டுமல்ல; மாற்றங்