பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. நடுவு நிலை பிறழ்ந்த சிந்தனை, நினைப்பு ஆகியவற்றிலிருந்து செயல்களில் முறை பிறழ்வு தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆதலால், நினைப்பில் தவிர்த்தலே சிறந்த பாதுகாப்பு.

‘கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.’

117

நடுவு நிலைமையாகிய உயர்ந்த நன்மைகளை ஏற்று ஒழுகியதால் ஒரோவழி தாழ்வு ஏற்பட்டாலும் அதனை உலகம் கேடாகக் கருதாது. இழிவு செய்யாது.

1. நடுவு நிலைப் பண்பு மேற்கொண்டு ஒழுகுதலால் தாழ்வு வராது. தாழ்வாவது வறுமை, இகழ்வு முதலியன.

2. நடுவு நிலைப் பண்பை மேற்கொண்டு ஒழுகியதால், ஒரோ வழி தாழ்வு வந்தாலும் உலகம் அதனைத் தாழ்வாகக் கருதாது. ஏன் எனில் நன்மை என்பது ஓர் இடத்தில் தாழ்வைக் கொடுத்தால் நன்மை செய்யப் பட்டாரிடம் ஆக்கத்தைத் தந்திருக்கும். அதனால், ஓர் ஆக்கத்திற்காக ஏற்பட்ட தாழ்வு என்று கருதிக் கேடாகக் கருதாது, இகழாது உலகம். நடுவுநிலை பிறழ்ந்து செய்யப்படும், ஒரு நன்மை செய்யப்பட்டிருக்கும் நன்மை, (நன்மை இல்லை. ஆனால் நன்மைபோல அறிவிலிகளால் கருதப்படுவது) ஆக்கத்தைத் தராது. ஆதலால் நடுவுநிலை பேரறமாகிறது.

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் விருப்பு - வெறுப்பு, பகை - நட்பு, சார்பு - சார்பின்மை, வேண்டியவர் - வேண்டாதவர், உதவியவர் - உதவாதவர், நமது இனம் - அயலினம், நமது மதம் - அயல் மதம், நமது சாதி - அயல் சாதி என்ற காரணங்களுக்காக மனம் மாறுபட்டு ஒழுகுதல் கூடாது; பழகுதல் கூடாது, நன்மையைச் செய்தல் அல்லது