பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



85


தவிர்த்தல் கூடாது. இங்ஙனம் நடுவுநிலைமை மேற்கொண்டு ஒழுகுதல் மூலம் உலக ஒப்புரவு தோன்றும்; வளரும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.’

118

நிறுவை செய்யப் பெறுவதற்கு முன் சமனாக நின்று, பின் எடையையும் அதற்கு நிகரான பொருளையும் நிறுத்து அளவு காட்டும் துலாக்கோல் போல, முதலில் எந்த ஒன்றையும் சமநிலையான நடுவுநிலையில் நின்று ஆராய்ந்து முடிவுகள் எடுத்து அறம் காட்டும் ஒழுக்கம், சான்றோர்க்கு அணியாகும்.

1. எந்த ஒரு செய்தியையும், கருத்தையும், நிகழ்வையும் சமநிலை உணர்வில் அதாவது தம் கருத்து, தம்முடைய நலம்போலக் கருதி ஆய்வு செய்தலே ஒழுக்கம்.

2. சாதி, இனம், சமயம், உறவினர், உறவினர் அல்லாதார் பகை - நட்பு காரணமாக ஒன்றை ஆய்வு செய்வதிலும் ஏற்பதிலும் விலக்குவதிலும் முறை பிறழாது அறம் நோக்கியே செயற்படுதல் வேண்டும்.

3. இன்றுள்ள உலகியல் இந்தச் சிறந்த அறத்தின்வழி இயங்காததே துன்பம் அனைத்திற்கும் காரணம். இத்தகு விருப்பு, வெறுப்புகள் இருப்பதால் செல்வமுடையார், அதிகாரமுடையார் ஆகியோரிடத்தில் நடிப்பாளர்கள் மேவிப் பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டு உண்மையான நட்பும் உறவும் காண இயலவில்லை. இத்தகு சூழ்நிலையால் இம்மைக்குப் பயன் இல்லை; மறுமைக்கும் பயன் இல்லை.

துலாக்கோலின் நடுமுள், தட்டுகளில் உள்ள பொருள்களின்பால் நாட்டமில்லாமலும், பொருள்களுக்கு உரியார்பால் சார்பு இல்லாமலும் அளவு காட்டும் இயல்பே தன் இயல்பென இயங்குதல் போல் நடுவு