பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



91


அகந்தையும், அழுக்காறு முதலிய தீக்குணங்களும், அவ்வழியே பகையும் தோன்றும். ஆதலால், இயல்பான நெறியில் பொறிபுலன்கள் அமைந்தவகையில் வாழ்க்கையை நடத்துதல் அடக்கத்தினைத் தரும். இத்தகையோர் ஆகுலங்கள் - ஆரவாரங்கள் செய்யார். ஆயினும் அவர்தம் பெருமை மலையைவிட உயர்ந்தது. மலையின் உயரம், வளத்தின் சிறப்பு, மலையை அணுகுவோர்க்கே தெரியும். மலை ஆர்ப்பரவம் செய்யாது. ஆனால், முகட்டில் துஞ்சும் முகில் இடித்து ஆர்ப்பரவம் செய்யும். முகிலுக்கு நிலைபேறு இல்லை. மலையே உயர்ந்தது.

1. இயற்கையோடிசைந்த வாழ்வில் ஈடுபடுக.

2. ஐம்புலன்களை வலிந்து அடக்கித் துன்புற வேண்டாம். அவற்றின் இயல்பான இன்பங்களை ஆர்ந்து நுகர்க.

3. ஐம்புலன் அடக்கம் என்பது, நெறிதவறி நுகர ஆசைப்படுதலைத் தவிர்த்தலேயாகும்.

4. புலன் நுகர்விலும் தன்னலமறுப்பு, பிறர்நலம் பேணல், அமைதி கைக்கொள்ளல் முதலியன அமையுமானால் சிறப்புடைய வாழ்க்கையாகும்.

5. காதலின்பம் தன் காதல் மனைவியை இன்புறுத்தலுக்காகவே, காதலித்தல் இயற்கை வழியிலானதென்க. தாம் மட்டும் இன்புறக் காதலித்தல் இயற்கை வழியன்று; அறமும் அன்று. இன்புறுத்துதலுக்காகவும் அஃது அமைந்ததென உணர்தல் வேண்டும்.

‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.’

125

செருக்கின்றி அடங்கி ஒழுகுதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாகும். ஆயினும் அவ்வெல்லாருள்ளும்