பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




9


செல்வத்தின் பயன்


மனிதகுலம் உயிர்ப்போடு உலாவி வாழ அடிப்படைத் தேவை உணவும் உடையுமே! அடுக்கிய செல்வம் ஆயிரம் பெற்றவனுக்கும் அவனுடைய இன்றியமையாத் தேவை - உணவுக்கு அரிசி நாழி, உடை இரண்டு. இந்த இரண்டை விஞ்சித் துய்த்தலும் அரிது. அதாவது நானாழி உண்பதும் அரிது. நாலிரண்டு எட்டு உடை உடுத்தலும் அரிது.

புதுமை உலகில் உடைகளின் உருவம் மாறியிருக்கின்றன. ஆனால் அளவில் மாறுதலில்லை. பழங்காலத்தில் இடையிற் கட்டிய ஆடை அளவுக்கே, மேல் ஆடை போட்டிருந்தனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும், அடுக்கிய செல்வங்கள் கோடி பெற்றிருந்தாலும் ஒருவன் துய்க்கும் துய்ப்பின் அளவு கூடுதல் இல்லை. ஆதலால், துய்ப்பிற்கு எல்லையை இயற்கை வரையறை செய்துவிட்டது. அப்படியிருக்கச் செல்வத்தை இவறிக் கூட்டிச் சேர்ப்பதில் பயன் யாது.

இயற்கையின் எல்லையைக் கடந்து துய்ப்பின், அந்தத் துய்ப்பு இன்பந்தராது. துன்பமே தரும், துய்ப்பனவும் தப்பும். உண்ணின் உறுபலன் பிணியே! பிணி துய்ப்பிற்கு ஊறு