பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதை விளக்கம்

101


பொன்னுக்காக, வேலிக் கணக்கில் நிலங்களுக்காக. இதை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பார்க்கிறார். பார்த்து வியப்போடு கேட்கிறார். இங்ஙனம் ஓடிஓடிச் சேர்க்கும் வீடும், விளைநிலமும், தோப்பும் மாடும் நமக்கு நிலையானவைதானா? இவை எப்பொழுதும் எங்கும் தொடர்ந்து வருமா? அவை இருந்த இடத்திலேயே இருப்பவை தானே. உடம்பு எங்கே கிடைக்குமோ அங்கேயே கிடக்கும் இந்த உடமையெல்லாம். அதுபோல அல்லாமல் என்றும் எப்பொழுதும் தொடர்ந்து வருகின்ற துணைவன் அல்லவா முருகன்? அவனைக் கூப்பிடவேண்டாமா? அவனைத் தேடி சுகமடைய வேண்டாமா? என்று அழகு சொட்டும் தமிழில் கவிஞர் கேட்கின்றார். கவிதையின் அமைப்பு அற்புதம். ஆழமோ சொல்லும் தரத்தன்று. உணர்த்தும் கருத்தோ மிகச்சிறந்தது. கவிதையைக் கேளுங்கள்.

“முத்தைய்யா: வேலா! முருகா! என ஓதும்
சொத்தையே தேடிச் சுகமடைவீர். நித்தம் இவ்
வீடும் களமும் விளைநிலமும் தோப்புகளும்
மாடும் சதமாகுமா?”

என்று கேட்கிறார். எவ்வளவு அழகான உபதேசம், எல்லோரும் முருகா முருகா என்று சொல்லி பாடிப்பரவி அவன் திருவடிகளையே சொத்தாகச் சேர்ப்போமாக.