பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

107



நெறிமுறைகள் பிறழப் பெறுவதால்தான் உறவுகள் நீடிப்பதில்லை; நிலைத்து நிற்பதில்லை; நண்பர்கள் பகைவர்களாகின்றனர்; உடன் பிறந்தவர்கள் கொலை யாளிகள் ஆகின்றனர். இவையெல்லாம் இயற்கையல்ல; தவிர்க்க முடியாதனவுமல்ல.

எல்லாவற்றிற்கும் நெறி முறைகள் உண்டு. நமக்கு எவையெல்லாம் நன்மையாக இருக்கின்றனவோ அவையெல்லாம் மற்றவர்களும் அடைய வேண்டும் என்று எண்ணவேண்டும். உறவுகள் ஒத்துழைப்பும் உதவியும் கொடுத்துப் பெறுவனவே தவிரத் தாமாக வருவன அல்ல.

உலகின் எல்லாத் துறைகளிலும் ‘ஒரு தலைக் காமம்’ கொடிதே! மற்றவர்கள் மனம் வருந்த எதையும் கூறுதல், செய்தல் தீது, நெறியன்று, ஆயினும் உலகியலில் இந்நெறி நிற்போர் சிலரே.

ஆதலால், அறிந்தோரே சமுதாயப் பொறுப்புடையராக நடந்து கொள்ளுதல் வேண்டும். அறிந்தோராக இருப்பவர்களே சமுதாயத்தை அழைத்துச் செல்ல வேண்டியவர்கள். அவர்களிடம் சமுதாயம் கூடுதலாக எதிர்பார்க்கிறது. அறியாதவர்கள் பலர்; அறிந்தவர்கள் சிலர். அறியாதவர்கள் நெறியில் நீங்கியவர்கள்.

நெறியில் நீங்கியவர்களிடம் நல்லன எதிர்பார்க்க இயலாது; முடியாது. ஆதலால் நெறியில் நீங்கியவர்கள் வருந்தத்தக்கன கூறினார்களேனும், “அவர்கள் கூறவில்லை; அவர்கள் அறியாமையின் காரணமாக கூறுகின்றனர்” என்று அறிவுடையார் கருதி அதனைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

கவுந்தியடிகள் மாதவத்தர்; நோன்பினால் உயர்ந்தவர்; இரக்கம் பெரிதும் உடையவர். கவுந்தியடிகள் கோவலனிடம் காட்டிய பரிவை, எவரிடம் யார் எதிர்பார்க்க முடியும்? ஆயினும், கோவலன் - கண்ணகி பற்றிச் சிறியோர் கூறிய தீய