பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

155


அணுகவில்லை. விலை மதிப்புக் கூறும்படிதான் கேட்கிறான். இதனால் தன்னுடைய பொருளின் விலை மதிப்புக் கூட அறியாமல் அவன் வாழ்ந்திருக்கிறான் என்று தெரிகிறது.

பரம்பரைச் செல்வத்தினால் வந்த தீமை இதுதான். முயன்று ஈட்டாத பொருளுக்கு யாரும் தகுந்த மதிப்பினைத் தரமாட்டார்கள். இஃது இயற்கை. இந்த இயற்கைக்கு, கோவலன் விதி விலக்கல்ல.

ஆக, உழைத்துப் பொருளீட்டாத பழைய வாழ்க்கை முறை, பரம்பரைச் செல்வத்தை மேலும் பெருக்க-வளர்க்க முடியாமல், அழித்த, இழிவு ஆகிய சென்ற காலப் பழக்க வழக்கங்கள், ஊழாக உருப்பெற்றுக் கோவலனைப் பிடர் பிடித்து உந்திச் செலுத்துகின்றன. வலியச் சென்று பொறி வாயில் அகப்படும் விலங்கு போலப் பொற்கொல்லனிடம் சிக்குகிறான்.

பொற்கொல்லன், வெற்றிகரமாகத் தனது பணியை முடித்து, நாடாள்வோனின் காவலருடன், கோவலனிடம் வருகிறான்; கோவலனைக் கள்வன் என்று காவலரிடம் காட்டுகிறான். காவலர்கள், கோவலன் கள்வனாக இருக்க மாட்டான் என்று விவாதிக்கின்றனர்.

ஆனால், கோவலன் ஆழ்ந்த மெளனம் சாதிக்கிறான். தன் கையிலிருப்பது தன்னுடைய சிலம்புதான் என்று கூடச் சொல்லாமல் இருக்கிறான். ஏன்? இருக்க வேண்டிய இடத்திலே இருக்காமல் இழிந்து வீழ்ந்த தற்கொலை மனப்பான்மையிலிருந்து கோவலன் மீண்டானில்லை.

ஆதலால், ஆழ்ந்த மெளனம் சாதிக்கிறான். கோவல்னின் ஊழ், தன்னுடைய நினைப்பை நிறைவேற்று தற்குரிய பிறிதொரு ஊழைக் கருவியாகக் கொண்டு காரியங்களை இயற்றுகிறது. சென்ற கால நிகழ்ச்சிகளை நினைத்து வருந்துதலைத் தவிர்த்து, புதிய ஆள்வினை யாற்றலைப் பெறும் நோக்கம் வந்திருக்குமானால், பொற்