பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

159


அரசியின் சிலம்பை, கண்டுபிடித்து விட்டதாகச் சொல்கிறான்.

காணாமற்போன சிலம்பு கைவசம் வந்தால், அரசியின் ஊடலைத் தீர்ப்பது எளிது என்று அரசன் கருதுகிறான். அதனால்,

“தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகிற்
கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு”

என்று ஆணையிடுகிறான். தவறு செய்யாத நிலையில் அரசி தவறெனக் கொண்டமையாலும், காதல் மிகுதியினாலும், நிலைமாறி அரசனின் வாய் உமிழ்நீர்வற்றி, “கொன்று அச்சிலம்பு கொணர்க” என்று கூறிச் சொற்சோர்வுபட்டு விட்டான். சொற்சோர்வு பொருட் சோர்வாக மாறி, கோவலன் கொலைக்குக் காரணமாயிற்று. பாண்டியன் செங்கோல் வளைந்தது.

பாண்டியனின் செங்கோலை வளைத்த வினையை “வல்வினை” என்று இளங்கோவடிகள் கூறுகிறார் ஏன்? பாண்டியன், சிறந்த அரசன். நெறிமுறை பிறழாதவன். அவனுடைய செங்கோலையே வளைத்த வினையாதலால் “வல்வினை” என்றார்.

காலத் தாழ்த்தியேயானாலும் பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னிலை எய்தினன், அயரா ஆள்வினையோடு, நீதியில் தோய்ந்த நெஞ்சத்தோடு, தனது செங்கோலை வளையவிடாமல், உயிரையே ஆணியாகக் கொடுத்துச் செங்கோலை நிமிர்த்தி, உலகத்திற்கே காட்டினான்.

நெடுஞ்செழியன் செங்கோலை வல்வினை வளைத்த வேகத்தைவிட, பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆள்வினை அதனை நிமிர்த்ததே, அதுதான், காப்பியத்தில் இறவாப் புகழ்பெற்றுள்ளது. ஊழ்வினையை, ஆள்வினையால்