பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாய அமைப்பு, உரிமைகளைக் கடமைகள் வழி அனுபவிக்கவே தூண்டும். உரிமைகள் முனைப்பினைத் தரா; பணிவினைத் தரும்; நெஞ்சுநிறை அன்பினைத் தரும்; தொண்டு மனப்பான்மையினை நல்கும்; அவ்வழி தன்னலமறுப்புத் தோன்றும்; பிறர் நலம் விழையும் பெருந்தகைமை விளையும்.

இத்தகு பண்புகளைப் பழந்தமிழகத்துப் பெண்கள் பெற்றிருந்தார்கள். அவர்கள் பெறாத உரிமையில்லை. ஆயினும் கணவன் வாழ்விலேயே நாட்டம் காட்டினர். கணவனை வாழ்வித்து வாழ்வதிலேயே இன்புற்றனர்.

பொதுவாக ஒன்று அல்லது ஒருவர் பெற்றுள்ள அழகு நலம், செல்வம், ஆகியன அது அல்லது அவர் துய்ப்பதற்கல்ல. அவரவர் அழகை - நலத்தை அவரவர் துய்த்தல் அரிது. மலரின் மணத்தை மலரே நுகர்தல் இயலாத ஒன்று. தென்றலின் குளிர் நலத்தினைத் தென்றலே துய்த்தல் இல்லை. இயலாததும் கூட.

அதுபோலக் காதலனின் அழகு நலன்களைக் காதலியும், காதலியின் அழகு நலன்களைக் காதலுனும், மாறித் துய்த்தலே இயற்கையின் நியதி. ஒருவனே துய்க்கத் தன்னை அவனிடம் ஒப்படைத்துத் தன்னல மறுப்புணர்வுடன் வாழ்தல் கற்பு. இக் கற்புநெறி இருபாலுக்கும் பொதுவே.

அதனால், தமிழகத்துப் பெண்கள் கணவன் மகிழ்தலுக்கே அழகு உடையவராக விளங்க விரும்புவர். கணவன் துய்த்து மகிழும் காலங்களுக்கு ஏற்றாற் போலவே ஒப்பனை செய்து கொள்வர். அதனாலன்றோ காரைக்கால் அம்மையார், தம் கணவன் தம் அழகு நலத்தினைத் துய்த்து மகிழ மறுத்தபோது துறந்தார்; பேய் வடிவம் கொண்டார்.

கண்ணகி வழி வழிச் சிறந்த குலத்தில் தோன்றிய குலமகள். மகளிர்க்குரிய இயல்பான குண நலன்கள்