பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒப்பனை செய்து கொண்டாள். கோவலன் பிரிந்து போன பிறகு கண்ணகி, அழகை வெறுத்தாள்; அணிகலன்களை வெறுத்தாள்; துயரினையும் அடைந்தாள்.

ஆனாலும், கணவன் நலம் கருதித் துயரினை மறந்து ஒழுகினாள். மங்கல நாணைத் தவிரப் பிற அணிகளை அணியாது நீக்கினாள். கண்ணகியின் அழகிய கண்கள் கோவலனைப் பிரிந்தமையினால் கருங் கண்களாக மாறிவிட்டன.

அறம் உண்டு. ஆனால் எந்த அறமும், கூட்டு முறையிலேயே செய்யப்படும். மனை அறத்திற்கென்று சில அறங்கள் உள்ளன. இதில் சில அறங்கள் தலைவியும் தலைவனும் சேர்ந்து செய்யும் அமைப்பு உடையன. ஒருவர் இன்றி ஒருவர் செய்தல் இல்லை.

அந்தணர்களைப் பேணுதல், அறநெறி நிற்போரை வாழ்வித்தல்; விருந்தினரை உபசரித்தல் ஆகியன மனையறத்தில் தலைவி செய்யக்கூடிய அறங்களாகும். கண்ணகி இந்த அறங்களைக் கோவலன் பிரிந்திருந்தாலும் செய்ய வசதி உண்டு. ஆனால் கண்ணகி செய்யவில்லை.

ஏன்? கணவன் இல்லாதபோது மனைவி அறம் செய்தல் கற்பு நெறியன்று. இது மட்டுமா? கண்ணகி கற்புக்காக, கோவலனின் புகழைக் காப்பதற்காக உள்ளத்தின் துன்பத்தினை மறந்து கோவலனின் பெற்றோரிடமும், அவர் தம் வீட்டுக்கு வரும் சான்றோரிடமும் செயற்கையாகப் புன்முறுவல் பூக்கின்றாள்.

ஏன்? கோவலனை விவாதப் பொருளாக்கிச் சீரழியச் செய்யக்கூடாது என்ற கற்பு நெறிதான் காரணம்.

கண்ணகி கோவலனைப் பிரிந்து வாழ்ந்த நிலையிலும் தம் கற்பினையும் காத்துக் கொண்டாள். கோவலனுக்குரிய எந்த நலன்களையும் இழக்காமலும் பேணிப் பாதுகாத்து வந்தாள். அதுபோலவே கோவலனின் பெருமையையும்