பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூட்டு, கோவலனைச் சிந்திக்க விடாமலேயே தடுத்துவிட்டது. ஆதலால் இளங்கோவடிகள் இங்கே ஊழை, எடுத்துக் காட்டவில்லை.

தேவந்தி, கோவலனைக் கண்ணகி திரும்ப அடைவதற்கு உரியவழியும் காட்டுகிறாள். சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகியவற்றில் மூழ்கிக் காம வேளை வணங்கினால் கோவலனைத் திரும்ப அடையலாம் என்று கூறுகிறாள். பல நாட்கள் கணவனைப் பிரிந்து வருந்தும் கண்ணகிக்கு இந்த வழிகாட்டுதல் ஆறுதல் தரும்; இன்பம் அளிக்கும் என்று தேவந்தி எண்ணினாள். ஆனால், கண்ணகி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரே வார்த்தையில் நறுக்குத் தெரித்தாற் போல் “பீடன்று” என்று கூறி மறுத்துவிட்டாள். இந்த இடத்தில் தேவந்தியின் ஆலோசனையை ஒரே வார்த்தையில் கண்ணகி மறுத்துப் பேசுவானேன்?

ஒரு துன்பத்தில் வருந்துவார்க்குப் பலர் எளிதில் ஆலோசனைகள் கூற வருவர். அந்த ஆலோசனைகள் பெரும்பாலும் தன்மதிப்பை இழக்கக் கூடியதாகவும் நெறிமுறைகளைக் கடந்ததாகவுமே இருக்கும். ஆயினும், தன்னல நயப்பு, தேவை என்ற அடிப்படையை வைத்துக் காது கொடுக்கத் தொடங்கிய நிலையிலிருந்து முற்றாக மாறிவிடுவர்.

இராமகாதையில் வரும் கூனி, கைகேயியின் மனத்தை மாற்றியதை நினைவு கூர்க.

இதன் தொடர்பாகத் தொடர்ந்து தேவந்தியிடம் பேசுவதால், தன் மனம் நெறிகளைக் கடக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வாய்ப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஒரே சொல்லில் “பீடன்று” என்று கூறி மறுத்து விடுகிறாள்.

காதல், கற்பு என்பன இன்பத்திற்கும் களிப்பிற்கும் மட்டுமே உரியவை அல்ல. தன்னல மறுப்பிற்கும், தம்மைச்