பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாண்டிமாதேவி அடைந்து விட்டாள்! இவ்வளவு நடந்த பிறகு ஏன் கண்ணகிக்குச் சினம் அடங்கவில்லை? மதுரையை அழிப்பதற்கு என்ன நியாயமிருக்கிறது.

மனித வாழ்வில் குறைகள், குற்றங்கள் என இருப்பதும் உண்டு. இவற்றில் குறைகள் மன்னிக்கத்தக்கன; மறக்கத் தக்கன. குறைகள் என்பவை வாழ்வியலோடு சம்பந்தப் பட்டவை. அப்பட்டமான தன்னலச் சார்புடைய ஒழுகலாறுகளால், சமூகத்துக்குப் பெரிய தீங்குகள் விளைந்து விடுவதில்லை.

கோவலன் மாதவியின்பாற் சென்றொழுகியது குறை. ஆதலால் கண்ணகி பொறுத்திருந்தாள். ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவனைக் கொன்றது குற்றம். இத்தகைய குற்றம் தனி மனிதனிடத்தில் கூட பெரிய தீமை தரும். அது பலர் உயிரை எளிதில் கொல்லக் கூடிய அரசாணையுடைய அரசனிடத்தில் இருக்குமாயின் நாட்டு மக்களின் கதி என்னாவது?

அதனால்தான் கண்ணகிக்குப் பாண்டியனின் குற்றத்தைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாத சினம் ஏற்பட்டது. அப்படியானால் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிரைத்தான் கொண்டாயிற்றே! மீண்டும் மதுரையின் மீது, ஏன் சினம்?

இளங்கோவடிகள் முடியைத் துறந்து மக்களை நாடி மக்களுள் ஒருவராகி, கண்ணகியின் காற்சிலம்பை முதலாகக் கொண்டு காப்பியம் செய்தவர். ஆதலால் காப்பியப் போக்கிலும் அரசியலில் மக்களுக்குரிய பங்கை வற்புறுத்த எண்ணுகிறார்.

நாட்டு மக்கள் நல்ல அரசை விரும்ப வேண்டும். நாட்டை ஆள்வோர் கள்ளுக் கடைகளைத் திறந்தாலென்ன? மூடினால் என்ன? கடன் வாங்கினால் என்ன? கொடுத்தால்