பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளங்கோவடிகள் எண்ணம் ஈடேறுமா?

225


மன்னன் செங்குட்டுவன் தனது பெருமிதத்தை அவர்கள் முன் கட்டுவதன் மூலம் தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணிவிட்டனர். காப்பியத்தின் நோக்கம் தமிழின ஒருமைப்பாடு-அடையாநிலை உருவாகிறது. செங்குட்டுவன்,


“ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீன்மொழி எல்லாம் நீலன் கூறத்
தாமரைச் செங்கண் தழல்நிறம் கொள்ள”

(நடுகற் 108-110)

நேரிடுகிறது.

ஆதலால், இளங்கோவடிகள் எண்ணிய ஒருமைப்பாடு கை கூடவில்லை. தமிழின ஒருமைப்பாடு என்றும் இருந்ததில்லை. சங்க காலத்தில் இரு அரசர்கள் இணைந்திருந்ததைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

“ஒருவீர் ஒருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரிய ராயின் இமிழ்திரைப்
பெளவ முடித்த விப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே”

(புறம் 58 : 20-23)

என்று பாடினார்.

மேலும் தமிழர் கூடி வாழும் ஒருமை நிலையை அயலவர் புகுந்து பிரித்து விட முயல்வர் என்றும் கூறுகிறார்.

“நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காதல் நெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி”

(புறம் 58 : 24-28)

என்பதறிக.