பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறியாதவராய் மதிமயங்கிக் கிடக்கின்றனர் என்ற வரிகள் மிகவும் போற்றத்தக்கன.

‘சிலம்பு நெறி'யில் பெண்களின் நிலைபற்றி அற்புதமாகக் கூறுவார்கள். கோவலனைத் தொலைத்த கண்ணகி கூறும் முதல் கேள்வி “பெண்டிரும் உண்டுகொல்” என்பது, இந்த ஊரில் பெண்கள் இருக்கின்றார்களா என்று கேட்கின்றாள்! என்ன கேள்வி இது? ஒரு ஊர், நகரம் என்றால் பெண்கள் இருக்க மாட்டார்களா? பிறகு ஏன் கண்ணகி அப்படிக் கேட்டாள்? நல்ல பெண்மணிகள் உள்ள நாட்டில் குற்றங்கள் குறையும்; கொலைகள் நிகழா, கள்வர் குறைவர், சிறைச்சாலைகள் மூடப்படும்! அன்று சோழநாட்டுப் பெண்கள் அணிகலன் தாங்கிகளாக இருந்தனர். சோழநாட்டு வீதியில் 1000 கழஞ்சு பொன்னிற்கு மாதவி, கூவி ஏலம்போட்டு விற்கப்படுகின்றாள். இக் கொடுமை அஞ்சாது தட்டிக் கேட்கப்படவில்லை. எனவே, நல்ல பெண்கள் இருக்கும் நாட்டில் குற்றங்கள் குறையும். இந்தப் புதிய பார்வை போற்றுதற்குரியது.

மகாகவி பாரதிமுதல் பட்டுக்கோட்டை வரை அரிய திறனாய்வு, அற்புதமாக அமைந்துள்ளது. எனவே புதிய நோக்கில் சமூகச் சிந்தனையின் அடிப்படையில் சிறப்பாக விளங்க இக்கால இலக்கியங்களில் விரிவாகக் கூறுவது சிறப்புடையது. வாழும் மனித சமூகத்திற்கு ஒப்பற்ற வழிகாட்டியாக விளங்க, சமூகச் சிந்தனை மிக்க இலக்கியங்களைக் கூறுவது மிகுந்த பாராட்டைப் பெறுகின்றது. ஆசிரியர் திறனாய்வால் வியக்க வைக்கின்றது. எனவே, ஒப்பற்ற சமுதாய நோக்குடைய இலக்கியங்களை அருள்நெறித் தந்தையவர்கள் சிறந்த நடையில்