பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று சீதை, இராவணனுக்கு அரசியல் நெறிமுறையை உணர்த்தியதை ஓர்க, உணர்க.

தம்பியர் தகவுரை

இராவணனின் உரிமைச் சுற்றத்தினர் இராவணனின் செயலை அறமாகாது, தகாது என்றே கூறினார்கள். தூதுவனாக வந்த அனுமனை இராவணன் கொல்ல முயன்றபோது வீடணன் தலையிட்டுத் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றான்.

‘அந்தணன், உலகம் மூன்றும்
ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன், அன்புக்கு ஆன்ற
தவநெறி உணர்ந்து, தக்கோய்!
இந்திரன் கருமம் ஆற்றும்
இறைவன் நீ “இயம்பு தூது
வந்தனென்” என்ற பின்னும்
கோறியோ, மறைகள் வல்லாய்!

(கம்பன்-5918)

என்பது வீடணன் அறிவுரை.

இலங்கைக்கு அனுமன் வந்து போனபின், இராவணன் தனது மந்திரிசபையைக் கூட்டி ஆலோசனை செய்கின்றான். மந்திரிசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கும்பகருணன் இராவணன் செய்கையை மறுக்கின்றான்; கண்டிக்கின்றான்.

ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப் பேம்
மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!

(கம்பன் - 6122)

இப்பாடலில் கும்பகருணன் ‘குற்றமற்ற பிறருடைய மனைவியைச் சிறையில் வைப்பது நல்லரசுக்குரிய நடை