பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

319


தொண்டின் பயனும் உயிர்க்கு ஊதியமாவனவாம். ஊதியம் உயிர்க்கு ஊதியம். கம்பனின் பாடல் இதோ;


பின்னும் தம்பியை நோக்கி, பெரியவன்
‘மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு
என்ன கேடுண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு மேல் வரும் ஊதியத் தோடு என்றான்.

(கம்பன்-2100)

ஆம்! மானுட வரலாற்றில் இடம்பெற விரும்பினால் தொண்டு செய்ய வேண்டும். இது கம்பனின் வாழ்க்கை நெறி.

யாரொடும் பகை கொள்ளற்க

`கம்பன் ‘யாரொடும் பகை கொள்ளக்கூடாது!’ என்ற வாழ்க்கை நெறியை வலியுறுத்துகின்றான்.

‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங் காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது: அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?”

(கம்பன்-1420)

ஆம்! கருத்து வேற்றுமைகள் வரலாம். உடன்பாடு இல்லாமற் போகலாம்! இவை பகையாக வளர வேண்டும் என்ற அவசியமில்லை! பகை வளரின் கலகம், போர் முதலிய அழிவுச் செயல்கள் நிகழும். கம்பன் உயிர்க்குல ஒருமைப்பாட்டை ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றான். இராமன் காட்டிற்கு வந்த இடத்தில் அவனுடன் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை ஏழு ஆயிற்று.

‘குகனொடும் ஐவர் ஆனேம்
முன்பு: பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த