பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் சீதையும்

325


அங்கொன்றுமாக எடுத்து ஆராய்வது-விமரிசனம் செய்வது இலக்கிய மரபுக்கு உகந்ததன்று.

கம்பனின் கருத்துப்படி இராமன் ஒரு சிறந்த தலைமகன். தெய்வத்தன்மை உடையவன். ஆனால், வான்மீகியின் கருத்துப்படி இராமன் ஒரு சாதாரண மனிதனே. வான்மீகி, இராமனைத் தெய்வத் தன்மையுடையவனாக யாண்டும் குறிப்பிடவில்லை. இராமனைப் பற்றி ஆராய வேண்டுமென்றால், ஒன்று முழுவதாக வான்மீகத்தை வைத்து ஆராய வேண்டும் அல்லது கம்ப ராமாயணத்தை வைத்து ஆராய வேண்டும். ஒன்றோடொன்றைப் போட்டுக் குழப்புவது-உப்பையும் சீனியையும் கொட்டிக் கலப்பது போலாகும்.

கம்பன் இராமகாதை செய்ததன் நோக்கமே மிகச் சிறந்தது. தமிழகத்தின் முச்சந்திகளில் வான்மீகத்தின் வழி இராமகாதை பயின்றது. கம்பனும் அப்படிப் பயின்ற இடங்களிலிருந்து கேட்டிருக்கின்றான். அக்கருத்துக்கள் தமிழ் நாகரிகத்திற்கு இயைந்தவாறு இல்லாமையையும் தன் மனத்திற்கு இசைவில்லாமையையும் உணர்ந்து வான்மீகத்தின் கருத்துக்கள் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் நோக்கத்துடனேயே கம்பன் இராமகாதையைச் செய்தான். இரண்டுக்கும் அச்சு ஒன்றே தவிர செய்தி வெவ்வேறு என்பதை மறந்துவிடக் கூடாது.

‘இராமனும் சீதையும்’ என்ற தலைப்பில் தலைவர் பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை மேற்குறிப்பிட்டவாறான குழப்பத்தையே விளைவிக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் “இராமனுக்கு அவன் தந்தை அவசரமாக நாளைக்கே முடிசூட்ட வேண்டுமென்கிற முடிவுக்கு வந்து, இராமனை அழைத்து, “இராமா! நாளைய