பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் சீதையும்

331



இந்தப் பாடல் இராமனின் பற்றற்ற உணர்வுக்கும் ஒழுக்கத்திற்கும் சீலச் சிறப்பிற்கும் எடுத்துக்காட்டு. கவிஞன் கம்பன் இந்த இடத்தில் இராமனுடைய பண்பாட்டை வியந்து தன் கூற்றாகக் கூறும் பாடல் பெரியார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.


“இப்பொழுது எம்ம னோரால்
இயம்புதற் கெளிதோ யாரும்
செப்பருங் குணத்து இராமன்
திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ்
வாசக முணரக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா
மறையினை வென்ற தம்மா.

அயோத். கைகேயி சூழ். 108.

மேலும், இராமன் பற்றற்றவனாக இருந்ததோடு மட்டுமின்றி, அரசுப் பொறுப்பினின்றும் தான் விலக்கப் பெறுவது கருதிக் கவலை கொள்ளவுமில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகின்றான். பெரும் பாரத்தைச் சுமக்கும் வண்டியில் பூட்டப் பெற்ற எருது அவிழ்த்து விடப் பெறும் பொழுது மகிழ்தல் போல் மகிழ்ந்ததாகக் கவிஞன் கூறுகின்றான். இங்கனம் குணத்தின் குன்றாகத் திகழும் இராமனை வடபுலக் கருத்தை மையமாக வைத்துக் களங்கப்படுத்துவது நியாயமில்லை. வான்மீகி காட்டும் இராமன் வேறு; கம்பன் காட்டும் இராமன் வேறு. தமிழர் போற்றும் தலைவன் கம்பன் காட்டும் இராமனே யாம்.

கம்பனின் காவியப்படி சீதை பெண்ணிற் பெருந்தக்காள், கற்பின் செல்வி, சீதையைப் பற்றிய விமரிசனத்திலும் கட்டுரையாசிரியர், ஒரு நூலை மையமாக வைத்துக் கொண்டு ஆராயவில்லை. இங்கேயும் நமக்குக்