பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மானுடன் வாழ்ந்ததும்” என்று போற்றுவான். மானுடச் சாதியினைத் தொடர்ந்து வருத்திவரும் வறுமையை மாற்றப் பொதுவுடைமைச் சமுதாயத்தைக் காண்பதே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஆதலால் சோழப் பேரரசு இருந்த காலத்தில் வாழ்ந்த கம்பன், நிலவுடைமைச் சமுதாயம் கொழுத்து வாழ்ந்திருந்த காலத்தில் தனியுடைமைச் சமுதாய நீக்கத்திற்கும், பொதுவுடைமைச் சமுதாயக் கால்கோளுக்கும் காப்பியம் இயற்றினான். கம்பனின் பொதுவுடைமைச் சமுதாயம் மலர்க!

"வண்ணம் இல்லை ஓர் வறுமை இன்மையால்,
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை பல்கேள்வி மேவலால்'

(நாட்டுப்....53)

"தெள்வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள்வார் முரசம் அதிர்மா நகர் வாழும் மக்கள்
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ"

(நகரப்.....73)

'கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்விமுற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லார் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ"

(நகரப்...74)