பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





19
புதுச்சேரி கம்பன் விழாத்
தலைமை உரை


கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கின்ற நண்பர்களே! பெரியோர்களே! சான்றோர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! கம்பனின் புகழ்பாடிப் பரவுகின்ற இந்த விழாவில் இந்த ஆண்டு கம்பனைப் புரட்சிப் பார்வையில் பார்க்க வாய்ப்பளித்த கம்பன் கழகத்து நண்பர்களுக்கு என்னுடைய பாராட்டு! வாழ்த்துக்கள்! நன்றி.

புதுவைக் கம்பன் கழகத்திற்கு 25 ஆண்டுகளாயிற்று. புதுவைக் கம்பன் கழகத்திற்கு நல்ல முறுகிய இளமை போலத் தெரிகிறது. எனவே புரட்சியைப் பற்றி அது சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. நான் நினைக்கிறேன் கடந்த காலம் வரையில் - கடந்த 24 ஆண்டுகளில் புரட்சி என்ற தலைப்பில் இந்தக் கழகம் சிந்தித்ததுமில்லை தலைப்புக் கொடுத்துப் பேசச் செய்ததுமில்லை; யாராவது எதிர்பாராமல் பேசினார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துக் கம்பன் கழகம் இப்படி ஒரு சிந்தனையை ஏன் சிந்திக்கிறது என்பதை நான் எண்ணிப்