பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுச்சேரி கம்பன் விழாத் தலைமை உரை

349


கொச்சைப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாதீர்கள்!

கம்பன் அப்படி ஓர் சிந்தனை செய்கிறான்! மீண்டும் நான் பணிவோடு சொல்ல ஆசைப்படுகிறேன், கம்பன் கழகத்தாருக்கு! கம்பனின் நாட்டுப் படலப் பாடல்களை - கம்பனின் கனவுகளை, உடோப்பியா - கற்பனை கனவு என்று கருதுகிறீர்களா அல்லது கம்பன் அப்படி ஒரு நாட்டைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டான் என்று நினைக்கிறீர்களா? யோசனை செய்யுங்கள்! அவனுடைய நாட்டுப்படலம் பாடல்களுக்கும் காப்பியத்திற்கும் கிட்டத்தட்ட உறவில்லாமல் இருக்கிறது. நாட்டுப்படலப் பாடலிலே படைக்கப்பட்ட இலக்கணங்களுக்கேற்றவாறு பாத்திரங்கள் காப்பியத்தில் இருக்கின்றனவா என்று கூடத் தேடித்தான் பார்க்க வேண்டும். ஆனால் நாட்டுப்படலத்திலே,

“கள்வருமில்லை காவல் செய்வாருமில்லை
கொள்வாரு மில்லை கொடுப்பார்களு மில்லை”

என்கிறான்.

ஆனால் இராமன் நாட்டை விட்டுக் காட்டுக்குப் போகிறபோது பார்ப்பனர் ஒருவர் பசு கேட்கிறார். கம்பனோ ஒரு இலட்சிய நாடு அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

கம்பன் பாடி எத்தனை ஆண்டுகளாயிற்று?

நம் நாட்டில் கள்வர் இருக்கின்றனரா? இல்லையா? இன்றைக்கு இந்த நாட்டில் தீவிரமாக வளர்கிற தொழில் பூட்டுத் தொழில், புதுப்புதுப் பூட்டுகளாகச் செய்கிற “லாக் டெக்னாலஜி” வளர்கிறது. புதிய தொழில்நுட்பம் தடுக்க முடியாதது. புதிய புதிய தொழில் நுட்பம் சார்ந்த பூட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை மறந்துவிடாதீர்கள்! பூட்டுகளை உடைப்பவர்களும் சும்மா இருக்கவில்லை. அதை