பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




2


இனிய காண்க!


படைப்புக் கடவுள் நான்முகன் என்பது நல்லோர் நம்பிக்கை. ஆனால் உலகியலறிந்தோர் தத்துவ ஞானம் உணர்ந்தோர் நான்முகனால் இந்த உலகம் படைக்கப்பெற்ற தென்பதை ஒத்துக் கொள்வதில்லை. உலகு இயற்கை, இயற்கையாய இவ்வுலகம் இயங்கும் அச்சு, கடவுள்! உயிர்கள் படைக்கப் பெற்றன அல்ல. அவை நிலையானவை. தோற்றமும் மறைவும் உயிர்க்கு இல்லை; உயிரியக்கத்திற்கு இறைவன் தலைமை தாங்குகின்றான். வழி நடத்திச் செல்கிறான். அவன் தலைவன். உயிர்கள் அவன் வழிச் செல்வன. எங்ஙனமாயினும் அறிவிற் சிறந்த தத்துவ ஞானிகள் உலகு படைக்கப் பெற்றதல்ல என்று ஓர்ந்து உணர்ந்துள்ளனர். அவன் இந்த உலகத்தின் படைப்பாளன் நான்முகன் என்பதை ஏற்பதில்லை. இந்தக் கருத்து இன்று நேற்று தோன்றியதல்ல; வழி வழி தோன்றி வளர்ந்து வரும் கருத்து.

ஒரோ வழி பழங்காலத் தமிழன் நான்முகன் உலகத்தைப் படைத்தான் என்று ஏற்றுக் கொண்டாலும் அவனுடைய படைப்பில் புதுமையில்லை; பொதுமையில்லை; நயத்தக்க நாகரிகமில்லை; பண்பாடில்லை. எனவே,