பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




3


யாதும் ஊரே! யாவரும் கேளிர்!


பழந்தமிழர் ஓருலகம் கண்டு வாழ்ந்தனர். அவர்களுடைய பரந்த மனப்பான்மை உலகறிந்த ஒன்று. கொடுத்துப் புகழ்பெற்ற கொடைவள்ளல் பாரி வாழ்ந்த பறம்பு நாட்டில் கணியன் பூங்குன்றன் என்ற சான்றோன் ஒருவன் தோன்றினன். கணியன் பூங்குன்றன் கனியமுதத் தமிழில் வல்ல கவிஞன். அழுத்த மனத்தினன், கணியன் பூங்குன்றன் தந்த கனியமுது, காலத்தை வென்று நிற்கும் கவிதை.

இன்று அறிவியல் வளர்ந்திருக்கிறது. வளர்ந்த அறிவியல், நாடுகளை இணைத்திருக்கின்றது. ஆயினும் எனது நாடு உனது நாடு என்ற வேற்றுமைப் பேச்சுக்கள், எல்லைத் தகராறுகள் ஒழிந்தா போயிற்று? இல்லையே! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அரசியல் அருளியலை ஆட்படுத்தித் தாம் மேம்பட்டு நாட்டுக்கும் நாட்டுக்குமிடையில், ஊருக்கும். ஊருக்குமிடையில், தெருவுக்கும் தெருவுக்குமிடையில் சமூகங்களுக்கிடையில், சமயங்களுக்கிடையில் வேலிகளைக் குறுக்குச் சுவர்களை எழுப்பிய வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது! அய்யகோ! இந்த அவல நிலைமை படையைப் பெருக்கிப் பசியைத் தோற்றுவித்திருக்கிறது. கவலையைத்