பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிசிராந்தையார் பெருவாழ்வு

65



ஒரு மனைவி தனது கணவனின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்தாது போனால் கணவன் கடன்படுவான். அவ்வழி பலரால் இகழப்படுவான். அதன் காரணமாக விலங்கியல் உணர்வுடையோர் கள்வராகவும், மனித உணர்வில் ஊசலாடிக் கொண்டிருப்போர் இரவலராகவும், உருமாற்றம் பெறுவர். ஆதலின் கணவனின் புகழ் காக்க விரும்பும் மனைவி வளத்தக்க வாழ்க்கையுடையவளாக அமைய வேண்டும்.

பால் உணர்வும், அவ்வழிப்பட்ட இன்ப விழைவும், நுட்பமான வாழ்வியற் கலைப்பாடு. இக் கலைப்பாடு நிறைந்த அருமைப்பாட்டுடன் கணவனை நிறை நல இன்பத்தில் பிணைத்து வைக்கத் தெரியாதவ்ர்கள் சிறந்த மனைவியராதல் அரிது. அதன் காரணமாக வாழ்க்கையில் ஏமாற்றமுற்ற கணவன் பரத்தையர் வழி போகத் தலைப்படுவான். இதனால் வாழ்க்கை சொர்க்கமாவதற்குப் பதில் நரகமாகி விடும். ஒருவனுக்கு மனைவியே மாட்சிமையைத் தருபவள்.

கணவனுக்கு மாட்சிமை மட்டுமின்றி அவனைத் தெய்வமாக்கி, வீடும் தர வல்லவள் மனைவியேயாம். இதனை வள்ளுவம்,

“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு”

என்று பேசும், பிசிராந்தையாருக்கு வாய்த்த மனைவி மாட்சிமை மிக்குடையாள், அது மட்டுமா? மாட்சிமைமிக்க ஒரு மனைவி கிடைத்து, ஒரு கணவன் குடும்பம் நடத்துவானானால் ஆங்கு நன்மக்கள் தோன்றுவர். மக்கட்பேறு உலக இயற்கை. ஆனால் நன் மக்கட்பேறு சிறப்பியல் வழிப்பட்டதேயாகும். பெற்றோர் என்ற பெயரைத் தாங்குதல் எளிதன்று. ஆனால் பெற்றோர் என்ற தகுதியைப் பண்பாட்டினைக் காப்பது சிறப்புடைய கடமையாகும். பெற்றோர் தவறிழைப்பின் பல தலைமுறைகளின் வரலாறு