பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்னமும் பதப்படுத்தப் பெறாத கச்சாப் பொருளாகவே இருக்கிறான்.

மனிதனுடைய மிரட்டல் ஓய்ந்ததா? உருட்டல் ஒடுங்கிற்றா? அரட்டல் அடங்கிற்றா! ஒன்றும் இல்லை. தன்னைக் கண்டு பிறர் அஞ்சுவதையே பெருமையென்று கருதுகின்ற ஒரு போலி நாகரிகம் உருவெடுத்து வளர்ந்துள்ளது. இது சராசரி மனித வாழ்க்கைக்குக் கூட முரணானது. பிறர் கண்டு அஞ்சத் தகுந்தவைகளுக்குத் தாமும் அஞ்சி, அவற்றினின்றும் விடுதலை பெறுதலே கடவுள் தன்மையைச் சார்ந்த வாழ்க்கை

நக்கீரர் “பலர் புகழ் ஞாயிறு” என்பார். பெரும்பாலும் இலக்கிய உலகத்தில் புகழுக்குரியது ஞாயிறே என்று பாராட்டப் பெறுகிறது. அடுத்து இறைவன் “பொருள் சேர் புகழ்” என்று பாராட்டப் பெறுகின்றான். புகழ் மிக மிக உயர்ந்தது. அது எளிதில் கிடைப்பதன்று. இன்று உலகியற் பொருட்களுக்குப் “போலி” உண்டாகியிருப்பதைப் போலவே, புகழிலும் போலி உண்டாகி வளர்ந்து வருகின்றது. ஏன்? இன்று புகழ் ஒரு விளம்பரப் பொருளாகிவிட்டது.

புகழ் செய்திப் பத்திரிகையில் பெயர் வருவதா? இல்லை! இல்லை!! “மாப்பிள்ளை விநாயகர் சுருட்டுப்” பெயரும்தான் பத்திரிகையில் வருகிறது. குற்றக் கூண்டில் நின்று கடுந்தண்டனை பெற்றவன் பெயருந்தான் பத்திரிகைகளில் வருகிறது. இவையெல்லாம் புகழாமோ?

இன்றைய சமுதாய அமைப்பில் வலிமையற்றோர், வலிமையுடையோரைச் சார்ந்து வாழ்தல் தவிர்க்க முடியாத தாகிவிட்டது. இங்ஙனம் சார்ந்து வாழ்பவர்கள் தாம் சார்ந்திருப்பவர்களைப் புகழ்ந்து கூறிடும் வார்த்தைகள். அம்மம்ம! ஆயிரம்! ஆயிரம்!! எல்லாம் உங்களால்தான். நீங்கள் இல்லாவிட்டால் எங்கள் கதி என்னாவது? உங்கள் காலத்தில்தான் இவையெல்லாம் நடக்கின்றன. கர்ண