பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




7


இனிய நெறி


வாழ்க்கை மிக நுடபமானது. உயிர் வாழ்க்கையில் தனிமை எங்கும் இல்லை; எப்பொழுதும் இல்லை. உயிர் வாழ்க்கை என்பது இயல்பில் கூட்டு வாழ்க்கையே. ஓர் உயிர் இன்னோருயிரோடு சார்ந்து, இணைந்து, பிணைந்து வாழு தலைத் தவிர வேறு வழியில்லை. சார்ந்து வாழ்தல் என்பது பொதுத் தன்மையது. இணைந்து வாழ்தல் என்பது சார்ந்து வாழ்தலினும் வளர்ந்தது; சிறப்புடையது. இணைந்து வாழ்தலினும் சிறந்தது; பிணைந்து வாழ்தல் ஓருயிர் பிறிதொரு உயிரோடு பிணைந்து வாழும் வாழ்க்கையே பெருமைக்குரியது. சார்ந்து வாழ்தல் என்பது பொதுவான உறவினர்களை - சுற்றத்தைக் குறிக்கும். இணைந்து வாழ்தல் என்பது, குருதித் தொடர்புடைய சுற்றத்தைக் குறிக்கும். பிணைந்து வாழ்தல் என்பது நட்பு, காதல் வாழ்க்கையைக் குறிக்கும். இணைந்தும் பிணைந்தும் வாழ்தல் அருமைப் பாடுடைய கலை. ஏன்? உயிர்க்குரிய பேறுகளில் அதுவும் ஒன்று. நட்பில்லாத வாழ்க்கை, நாகரிகம் இல்லாத வாழ்க்கை தோழமை இல்லாத வாழ்க்கை தொல்லுலகில் துன்பம் தரும் வாழ்க்கை, கடவுள், உயிர்களைப் பதப்படுத்திப் படிமுறையில் வளர்க்கவே இத்தகைய இணை வாழ்வியல் முறையை