பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செல்லவில்லை. இன்றைய இளைய சமுதாயம் பாரதியின் கனவை நினைவாக்க முன்வரவேண்டும்! பாரதியின் புதுவிதியைப் பாரதத்தின் விதியாக சட்டம் இயற்றவேண்டும். நாடு பொதுவுடைமை நெறியில் நடைபோடவேண்டும். பொதுவுடைமை நெறி இந்த நாட்டின் ஆன்மீக வளத்தை அடித்துக்கொண்டு போகாமல் பாதுகாக்க வேண்டும். இதுவே பாரதிக்கு நாம் செய்யும் தொண்டு.


இந்திய சமயம்

இந்தியா, உலக நாடுகளைவிடச் சிறந்தது என்று உலகத் தத்துவ ஞானிகள் பாராட்டியுள்ளார்கள். உலகத்தின் எல்லா நாடுகளிலும் ஆறுகள் உண்டு. இந்தியாவிலும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் மலைகள் உண்டு. இந்தியாவிலும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் இயற்கைவளம் உண்டு. இந்தியாவிலும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் பொருள் செழிப்பும் வறுமையும் உண்டு. இந்தியாவிலும் இவ்விரண்டும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் மனிதர்கள் உண்டு. இந்தியாவிலும் உண்டு. அப்படியானால் என்னதான் வேறுபாடு? உலகத்தின் வேறு எந்த நாட்டிற்குமில்லாத பெருமை இந்தியாவிற்கு உண்டு. அது என்ன?

உயிரைப் பற்றி அறியவும், ஆராய்ந்து தெளியவும் உயிர்க்கு உறுதி சேர்க்கவும், உயிர்க்கு உய்தி சேர்க்கவும், முயன்ற ஒரே நாடு இந்தியாதான். உடல் வாழ்க்கை வேறுஉயிர் வாழ்க்கை வேறு என்று பகுத்தறிய முடியாத நாட்டு மக்கள் இன்னும் உள்ளனர். உடல் வாழ்க்கையினும் உயிர் வாழ்க்கை சிறந்தது. உயிர் வாழ்க்கைத் துணையே உடல் வாழ்க்கை. "உயிர் நிறை நலம் எய்துதலே வாழ்க்கையின் குறிக்கோள்" என்று வாழ்ந்த மக்கள் நிறைந்த நாடு இந்திய