பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

119


வேண்டாம்; உடைமைகள் போதும் என்கிற இழிவான மனப்போக்கு உலகில் தோன்றிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பாரத நாட்டு மக்களுக்கு மகத்தான பொறுப்பு இருக்கிறது. அவர்கள் பாரத நாட்டின் மக்கள் என்னும் நினைவில் நிலைத்து நின்று இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அதுவே பாரதிக்குச் செய்யும் நன்றி; வழிபாடு; கடப்பாடு.

"பாரதநாடு பார்க் கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்”

பாரதி


என்ன செய்யப் போகிறோம்?

பாரதி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்த பாரத தேசத்தில் பிறந்தவன்; வளர்ந்தவன்; வாழ்ந்தவன். பாரதி, இந்த நாட்டு மக்கள் வறுமையில் வாடியதைக் கண்டவன்; வறுமைக்கு எதிராகப் பாடியவன்; வறுமையை எதிர்த்துப் போராடும்படி மக்களைத் துரண்டியவன். ஏன்? வறுமை, கவிஞன் பாரதியைச் சுவை பார்த்ததைப் போல வேறு யாரையும் சுவை பார்த்திருக்கமுடியாது. ஆயினும் பாரதி, தன் வறுமைக்கு வருந்தியதில்லை. "மூட்டைப் பூச்சி", "கொசு" முதலியன போன்ற வள்ளல்களைத் தழுவி நின்றவனுமில்லை; புகழ்ந்து பாடியவனுமில்லை.

பாரதிக்கு, அவன் பசியைவிட நாட்டு மக்களின் பசியே துன்பத்தைத் தந்தது.

{{block_center|

"நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!”

என்று பாடுகின்றான். இங்ஙனம் உண்பவர்கள்-நாட்டுளோர்

பசி நீக்க முயற்சி செய்யாமல் உண்பவர்கள், ஊனை வளர்க்கிறார்கள். அத்தகையோர் வெறும் பிண்டம் என்பது பாரதியின் கருத்து.