பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

127


பிடித்திருக்கிறார்களாம்! அந்தக் குண்டு வீசப்பெறும் நாடுகளில் பூதபெளதிகப் பொருள்களையெல்லாம் அழிக்காது. ஆனால், உயிர்க் குலத்தை அழிக்கும்! வையகமும் வானகமும் உயிர் குலத்திற்குத்தானே! உயிர்க் குலத்தை அழித்து உடைமைகளைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு முதலாளித்துவ உலகம் நச்சுத் தன்மையடைந்திருக்கிறது. இது கலியுகத்தின் திருவிளையாடல் போலும்! அதனால்தான் பாரதி,

"பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்! தெய்வ விதியிஃதே!”


(விநாயகர் நான்மணிமாலை - 39)


என்று வீரசபதம் கொள்கின்றான்!

இங்ஙனம் வீரசபதம் கொண்டு விளங்கிய பாரதிக்கு உருசிய நாட்டில் நடந்த புரட்சிச் செய்தி கிடைத்திருக்கிறது. அந்தப் புரட்சியை எழுச்சியுடன் வரவேற்கின்றான். தன்னுடைய நினைப்பு, உருசியாவில் நிகழ்ந்து விட்டதை அறிந்து ஆரவாரக் கூத்தாடுகின்றான்.

"இடிபட்ட சுவர்போல கவி விழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ!"

(புதிய ருசியா-6)

என்று உருசியப் புரட்சியை வரவேற்கின்றான்; வாழ்த்துகின்றான்! சோவியத் புரட்சியை முதன் முதலாக வரவேற்றவன் கவிஞன் பாரதியே!

சோவியத் புரட்சியை வரவேற்ற பாரதி, அதற்கு விளக்கங்களும் தருகின்றான். ஏன் புரட்சி? எதற்காகப் புரட்சி? என்று தெரியாமல் அர்த்தமில்லாதவைகளைச் செய்து புரட்சியென்று சொல்லிக் கொண்டிருக்கலாமா? தமிழ் இலக்கிய உலகிற்குப் 'புரட்சி'யென்ற சொல்லையே முதற்-