பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



குலத்தை அடிமைத்தளத்திற்கு ஆளாக்குகிறது. நீரழிவு நோயினும் இது கொடுமையானது. அதனால் பாரதி, தான் விரும்பிய பாரத சமுதாயத்திற்கு,

"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை”

என்றே இலக்கணம் வகுக்கின்றான். அவனது முழக்கம் "எல்லோரும் ஒர்குலம்" என்பதேயாம்.

ஒரு நூற்றாண்டு ஓடிவிட்டது. பாரதி வழியில் பாரதம் நடை போடாமல் இல்லை. பாரதி வழியில் பசுமைப் புரட்சியும் தொழிற் புரட்சியும் நடைபெற்றுள்ளது. ஆயினும் பொதுமைப்புரட்சி நடைபெறவில்லை. நூற்றாண்டுவிழா நினைவாகவாவது பாரத நாடு புதுமை படைக்குமா? பொது உடைமை படைக்குமா?


(நன்றி-தாமரை டிசம்பர் 1981)