பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

133



சுதந்தரமான கவிஞன்

பாரதி அடிமையாகத்தான் பிறந்தான்; அடிமையாகத் தான் வாழ்ந்தான்; அடிமையாகவே தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டான் என்பதில் இரண்டு விதமான கருத்து இல்லை. அவனுடைய பொன்னுடல் மீது இந்த நாட்டின் சுதந்தர மணிக்கொடி போர்த்த முடியாமல் தான் அவன் செத்துப்போனான். ஆனால், அவனுடைய திண்மையான நம்பிக்கையின் காரணமாக இந்த நாடு விடுதலை பெற்றுவிட்டது என்றே பாடுகின்றான். ஆக, கவிஞன் பின்னே வருகிற சுதந்தரத்தை ஆன்ம அளவில் - உணர்வு அளவில் பெற்று, முதலில் தான், சுதந்தர மனிதனாகிறான்.

எந்த மனிதன் தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்தரத்தை அனுபவிக்க முடியாமல் இருக்கிறானோ அந்த மனிதனால் ஒரு சமுதாயத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ விடுதலையை வாங்கித்தரமுடியாது. பின்னிப் பிணைந்த ஆசைகளாலும் தன்னலத்தாலும் பல்வேறு சூழல்களாலும் தன்னை அடிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறவர்கள் ஒரு நாட்டிற்கோ, ஒர் இனத்திற்கோ விடுதலையை வாங்கித் தர முடியாது. பாரதி அத்தகைய சூழல்களிலிருந்தெல்லாம் விடுதலை பெற்று விட்டான். அவனைப் பசிவருத்தினாலும் காக்கை குருவியினுடைய பசிதான் அவனைத் துன்புறுத்தியது. இருக்கின்ற அரிசியைக்கூட காக்கை குருவிகளுக்கு அள்ளி இறைத்து அவை சிறகடித்துப் பறப்பதைப் பார்த்து மகிழ்வான். ஆக, பசியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் சாதிகளி லிருந்தும் மதங்களிலிருந்தும் அவன் தன்னை முதலிலே விடுதலை செய்து கொண்டான். எனவே, தான் விடுதலை பெற முடிந்தது எவ்வளவு உண்மையோ அது போல இந்த நாடு விடுதலை பெற முடியும் என்று நம்பினான். எனவே அடிமையாகக்கிடக்கிற காலத்திலேயே "ஆடுவோமே-